பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த விளம்பூர் பகுதியில் செப்டம்பர் 17ஆம் தேதி பாஜகவினர் சார்பில் கட்சிக்கொடி நடப்பட்டு, வாழ்த்து பேனர்களை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அக்கட்சியின் கொடியை உடைத்து சேதப்படுத்தி கட்சி கொடியை தீயிட்டு எரித்ததோடு, வாழ்த்து பேனர்களை கிழித்தெரிந்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.
கொடி, பேனர்களை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கோரி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த சூனாம்பேடு ஆய்வாளர், விரைவில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.