17ஆவது மக்களவைத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆறு கட்டங்களுக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் 59 மக்களைவத் தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தா மக்களைவத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயகக் கடைமையை நிறைவேற்றினார்.