கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தலைமை நிர்வாகி கேரி லாம் புதிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தகுந்த இடைவெளி கடைபிடித்தல் கட்டாயமாக்கல், தினமும் மாலை ஆறு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை உணவகங்கள் செயல்படும் நேரம் நிறுத்தல், பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் முகக்கவசங்களை கட்டாயமாக அணிதல், பொது இடத்தில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் நேற்று (ஜூலை13) மட்டும் 52 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,522 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஹாங்காங்கில் உள்ள சினிமா அரங்குகள் மார்ச் இறுதி முதல் மே மாத தொடக்கத்தில் ஆறு வாரங்களுக்கு மூடப்பட்டன. தற்போது ஜூலை 15 இரவு முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: சச்சின் பைலட் நீக்கம்!