ETV Bharat / briefs

கரோனா: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்

author img

By

Published : Mar 25, 2020, 7:13 AM IST

Updated : Mar 25, 2020, 3:34 PM IST

பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய நபர்களாகக் கருதப்படும் படித்தவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் நிலைமையின் தன்மை உணராமல் நேர்மாறாக நடந்துகொண்டு சமூகத்திற்கு துரோகம் இழைப்பது தவறு.

Covid -19
Covid -19

கரோனா வைரஸ் பாதிப்பு உடல்நல சிக்கல்தானே தவிர அவமானத்திற்குரிய அம்சம் ஒன்றுமில்லை. பொது சமூகத்திடம் இது குறித்த விழிப்புணர்வு வேண்டும் எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் இவ்வாறு சொல்வதற்கு அடிப்படைக் காரணம் ஒன்று உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்கு விமானப் பயணிகள் மூலமாகவே பரவத்தொடங்கியது. வெளிநாட்டுப் பயணிகளைக் கண்காணித்து அவர்களைக் கட்டுக்குள் வைத்து சீர்ப்படுத்தினாலே நோய் பரவலைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்.

இதன் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் தங்களது பயண விவரத்தை மறைக்கக் கூடாது என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பாலிவுட் பிரபல பாடகி கனிகா கபூர் விமான நிலைய பரிசோதனையிலிருந்து தப்பிச்சென்று அடுத்த சில நாள்களில் கேளிக்கைகள் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். பின்னர் அவருக்குக் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோதுதான் மேற்கண்ட விவரம் தெரியவந்து, காவல் துறை கனிகா மீது வழக்குத்தொடுத்தது.

இதன் சங்கிலித்தொடர் விளைவு, அவருடன் கேளிக்கையில் கலந்துகொண்ட பாஜக எம்.பி. துஷ்யந்த தவே, உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் மூத்தத் தலைவர் உள்ளிட்ட பலர் வைரஸ் தொற்று அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தும் சூழலுக்கு ஆளானார்கள்.

நிலைமை எந்த அளவுக்கு தீவிரமானது என்றால் துஷ்யந்த் தவே நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட இடத்திற்குச் சென்றதன் காரணமாக குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி அனைத்துத் தலைவர்களையும் இந்தச் செயல் தேவையற்ற சிக்கலுக்குள்ளாக்கியது.

நல்ல வேலையாகத் துஷ்யந்த் தவேக்கு கரோனா தொற்று இல்லை என்ற முடிவுவந்ததால் எந்தத் தலைவருக்கும் பாதிப்பு இல்லாமல் போனது (தற்போதுவரை). விதிமுறை மீறி நடந்துகொண்டவரின் ஒரு தவறான செயல் எத்தகைய அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பதற்கே இந்த விரிவான உதாரணம்.

கனிகா மட்டும் அல்ல; கொல்கத்தா தலைமைச் செயலக உயர் அலுவலர், தெலங்கானா காவல் துறை துணை கண்காணிப்பாளர், ரயில்வே ஊழியர் ஒருவர் எனப் பலர் தங்கள், தங்களுடன் சார்ந்தோரின் விவரங்களை மறைத்து ஒட்டுமொத்த சமூகத்தையே அபாயத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா: மகனை மறைத்த டி.எஸ்.பி. மீது நடவடிக்கை

இதற்கு நேர்மாறான உதாரணங்களை நாம் வெளிநாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி கரோனா பாதிப்புக்குள்ளானதைத் தாமாக முன்வந்து அறிவித்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் தன்னால் வீட்டிலிருந்தே நாட்டிற்காகப் பணியாற்ற முடிகிறது என்று தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்கிறார்.

ஒரு நாட்டு பிரதமரின் இந்த வெளிப்படைத் தன்மையானபோக்கும் இயல்பான நடவடிக்கையும் மக்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இயல்பான வெளிப்படைத் தன்மை சமூகத்திலும் பிரதிபலிக்கும்.

கனடா மட்டுமல்ல ஸ்பெயினிலும் பிரதமரின் மனைவி, பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் தொடங்கிப் பல்வேறு பிரபலங்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் தங்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை வெளிப்படையாகத் தெரிவித்து தனிமையில் உள்ளனர்.

ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் அலட்சியமான பொறுப்பற்ற உதாரணங்கள் வருவது ஆபத்தான ஒன்றாகும்.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வருவோர் வைரஸ் பாதிப்பை அவமானமாகக் கருதி அந்த அச்ச உணர்வு காரணமாகத் தங்கள் பயணத்தை மறைப்பது ஒருபுறமிருக்க, இங்கு குவாரன்டைன் எனப்படும் தனிமைப்படுத்தப்படும் இடத்தில் தங்களுக்கு ஏற்றார்போல் ஏ.சி., வீட்டு உணவு உள்ளிட்ட சொகுசு வசதி கிடைக்காது என்பதால் காய்ச்சல் வெளியே தெரியாதது போல் மாத்திரை போட்டுக்கொண்டு தப்பிச்செல்லலாம் என்ற முயற்சியிலும் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் நோய் பாதிப்பை எந்தளவுக்கு கட்டுக்குள் வைக்கலாம் எனப் பல்வேறு துறையினர் இரவு பகலாகச் செயலாற்றிவருகின்றனர். ஆனால், இது குறித்து பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய நபர்களாக கருதப்படும் படித்தவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் நேர்மாறாக நடந்துகொண்டு சமூகத்திற்கு துரோகம் இழைக்கின்றனர்.

சமூகத்தின் முக்கியத் தளத்தில் செயல்பட்டுவரும் இவர்கள் முதலில் பினராயி விஜயன் சொல்வதுபோல் இது ஒரு உடல்நலச் சிக்கல் சமூக அவமானம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாழும் ஏழைகளுக்கு இடர்ப்பாடு ஏற்படுத்தும் பேரழிவு நோய்கூட மேல்தட்டு சமூகத்தின் வழியாகவே வருகிறது என்று மூத்த செய்தியாளர் சுவாதி சதுர்வேதி தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சுவாதி சதுர்வேதி தெரிவிக்கும் கருத்து இவர்கள் உள்நோக்கத்துடன் அடித்தட்டு மக்களை அபாயத்தில் தள்ளுகிறார்கள் என்பதில்லை, மாறாக தங்கள் அறமற்ற அலட்சியத்தால் பாமர்களைப் படுகுழியில் தள்ளுகிறார்கள் என்பதே.

இதையும் படிங்க: கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?

Last Updated : Mar 25, 2020, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.