திருச்சியில் இன்று நடைபெறவுள்ள குடிமராமத்து ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டது. அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் கரோனா கண்டறிதல் சோதனை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதியன்று, சென்னையிலிருந்து தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் சத்தியகோபால் ஐஏஎஸ், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆகியோர் ஆய்வுசெய்தபோது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.