சென்னை, மேற்கு தாம்பரம் லோகநாதன் தெருவில் அண்ணாலை ரெசிடென்சி எனும் தனியார் தங்கும் விடுதி செயல்படுகிறது.
தற்போது தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதால் தாம்பரத்தில் உள்ள தீபம் எனும் தனியார் மருத்துவமனையுடன் ஒருகிங்ணைந்து இந்த விடுதியில் 20க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், எச்சரிக்கை செய்யும் பலகை வைக்கவில்லை, தூய்மைப் பணி மேற்கொள்ள வில்லை என அக்கம் பக்கத்து குடியிருப்புவாசிகள் கேட்டபோது விடுதி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், 30 க்கும் மேற்பட்டவர்கள் அந்த விடுதியை முற்றுகையிட்டு நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தகலறிந்து வந்த தாம்பரம் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.