ETV Bharat / briefs

சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்

author img

By

Published : Jun 17, 2020, 7:21 AM IST

சென்னையில் மொத்தம் 478 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Chennai Corporation Mayor Prakash
Chennai Corporation Mayor Prakash

கரோனா தொற்று சென்னையில் அதி தீவிரமாகப் பரவிவருகிறது. அதனைத் தடுக்க மாநகராட்சி முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மக்களிடம் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறுகையில், "சென்னை மாநகராட்சி கோட்டத்திற்கு இரண்டு மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 400 இடங்களில், 140 நகர ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட்ட கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர்கள் குழுவோடு சென்று மருத்துவ முகாம் நடத்துகின்றனர்.

140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 478 மருத்துவ முகாம்கள் நேற்று நடைபெற்றன.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 மருத்துவ முகாம்கள், அண்ணாநகரில் 47 முகாம்கள், தேனாம்பேட்டையில் 46 முகாம்கள், கோடம்பாக்கத்தில் 44 முகாம்கள் நடைபெற்றன.

இதில், 27 ஆயிரத்து 577 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 588 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்கள் கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீதம் உள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன" என்றார்.

இதையும் படிங்க: காவல் ஆய்வாளருக்கு கரோனா; கோட்டார் காவல் நிலையம் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.