தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் 23 வயது நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி வருகை தரும் பொதுமக்களை அணைக்கரை சோதனைச்சாவடியில் ஆய்வு செய்து, அனுப்பி வைக்கும் பணியில் காவலர் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில், பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்றது. அதில் நோய்த்தொற்று உறுதி என நேற்று (ஜூன் 19) தகவல் வந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் பணிபுரிந்த பந்தநல்லூர் காவல் நிலையம் அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்காலிகமாக, காவல் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது.