கோயம்புத்தூர் மாவட்டத்தில் 118 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,905 ஆக உயர்ந்துள்ளது. கோவை ஈ.எஸ்.ஐ, மருத்துவமனையில் இருந்து இன்று ( ஜூலை 18) 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை மொத்தம் 717 ஆக உள்ளது. கரோனா தொற்றால் இன்று(ஜூலை 18) 86 வயது முதியவர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் 118 பேருக்கு கரோனா!
கோவை: கரோனா தொற்றால் இன்று ( ஜூலை 18) 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 21 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.