ETV Bharat / briefs

காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா - காவல் நிலையத்திற்குச் சீல் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: 57 வயது மதிக்கத்தக்க காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா - காவல்நிலையத்திற்கு சீல்

author img

By

Published : Jun 20, 2020, 2:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் காவல் நிலைய வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் மங்களம் ஊராட்சி சார்பாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காவல் நிலையத்தில் பணிபுரிந்த மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவு வரும் வரை தொற்று ஏற்படாத வகையில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.