கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 30-ஆம் தேதி வரை, மாவட்டத்திற்குள் மட்டுமே பொதுபோக்குவரத்து சேவை என்றும், பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
அதன்படி அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காவல் துறையினர், சுகாதாரத்துறையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை எல்லையில் நுழையும் வாகனங்களைச் சோதித்து இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
அதேநேரம் எந்த மாவட்ட அரசுப்பேருந்துகளில் பொதுமக்கள் வந்தாலும், புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் மூலமே அழைத்துச் செல்லப்படுகின்றனர்.