உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக, மக்கள் அனைவரும் அச்சமடைந்து வருகின்றனர். தற்போது வரை இதனுடைய தாக்கம் காணப்படும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொது மக்களிடையே அனைத்து பகுதிகளிலும் துாய்மையை கடைப்பிடிக்கவும், வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் தமிழ்நாடு தீயணைப்பு துறை பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குன்னூர் தீயணைப்பு துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், 'கரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளில், நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்,' என்பது குறித்து ஓவியங்கள் மூலம் விழிப்ணர்வு ஏற்படுத்தினர். இப்போட்டியில், சமூக இடைவெளியுடன் மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு விரைவில் சன்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.