கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் அண்டை மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு தளர்வை அடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் அதன் பரவல் வேகமடைந்து வருகிறது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 28) ஒரே நாளில் 58 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிட்-19 சிறப்பு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த வெவிலியருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி, ரத்த மாதிரிகள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போல, பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்ட 57 பேருக்கு இன்று கோவிட்-19 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது அவர்கள் அனைவரது குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்கள் வசித்துவந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரையில் விருதுநகரில் 363 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பாதிப்புகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்பு அம்மாவட்ட பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.