மதுரையில் இதுவரை கரோனா தொற்று காரணமாக 11 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 8,787 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,411 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 257 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை தொடர்ந்து நடத்திவருகின்றன.
அதன் ஒருபகுதியாக, பரிசோதனை எண்ணிக்கையும் நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.
அதேபோல், சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவருகின்ற காரணத்தால், கடந்த சில நாள்களாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.