தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி கிருமிநாசினி தெளிப்பதும், மக்களுக்கு முகக்கவசம் வழங்குவதும் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் வீட்டையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவிக்கும். அதன்படி, சென்னையில் இதுவரை 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மண்டல வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவ்விவரம் பின்வருமாறு:
- திருவொற்றியூர்- 14
- மணலி- 9
- மாதாவரம்- 20
- தண்டையார்பேட்டை- 8
- ராயபுரம் - 78
- திரு.வி.க.நகர்- 54
- அம்பத்தூர்- 19
- அண்ணா நகர்- 0
- தேனாம்பேட்டை- 10
- கோடம்பாக்கம் - 73
- வளசரவாக்கம்- 1
- ஆலந்தூர்- 7
- அடையார்- 13
- பெருங்குடி- 28
- சோழிங்கநல்லூர்- 26