ஈரோடு மாவட்டம் பழைய கரூர் சாலை மக்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அப்புகாரில், `நாங்கள் வசிக்கும் பழைய கரூர் சாலை பகுதியில் கடந்த சில வருடங்களாக ஒரு சிலர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் உச்சத்தை அடைந்தபோது ஈரோடு பழைய கரூர் சாலை மக்கள் நலச்சங்கம் சார்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
அதன்பேரில் அச்சுறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட சமூக விரோதிகளை சிறைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் தற்போது குற்றவாளிகளாக இருக்கும் அவர்கள், தாங்கள் திருடும் பொருள்களை எல்லாம் எங்களது சங்க நிர்வாகிகளிடம் கொடுத்து வைத்துள்ளதாக காவல் துறையினரிடம் பொய்யான வாக்குமூலத்தை கொடுத்துள்ளனர்.
இது குறித்து காவல் துறையினரும் சம்பந்தப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் .
மேலும், மக்கள் நலச் சங்கத்தினர் பல்வேறு இடையூறு செய்ய குற்றவாளிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இது மாதிரியான பொய் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து எங்களை பாதுகாக்க வேண்டும்` எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொய் புகார் அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!
ஈரோடு: பொய் புகார் கொடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் சாலை மக்கள் நலச்சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.