தமிழ்நாடு மீன்வளத் துறையும், ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகமும் இணைந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ராமேஸ்வரம் நகராட்சிக்குச் சொந்தமான மீன் சந்தையில் மீன் விற்பனைக்கான கடைகளை கட்டும் பணிக்காக டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், கட்டடத்தை தாங்கி நிற்கக் கூடிய அளவிற்கு பலமான கம்பிகள், தரமான செங்கல், பயன்படுத்தப்படவில்லை. மேலும் அஸ்திவாரதத்திற்குப் பில்லிங் மணல் நிரப்பப்படவில்லை. மாறாக குப்பை மேட்டில் உள்ள கழிவுகளுடன் கூடிய மணல் நிரப்பப்பட்டு வருகிறது .
இதனால், அரசு பணம் வீணாவது மட்டுமன்றி குறுகிய காலத்திலேயே இந்த கட்டிடம் இடிந்து விழும் வாய்ப்பும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து உடனே சரி செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மார்கெட் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தரமற்ற பொருள்களை கொண்டு கட்டடம் கட்டுமான பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: திருச்சியில் போராட்டம்: உடலைக் கிழித்துக் கொண்ட விவசாயி!