ETV Bharat / briefs

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்புக்கு நீதி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்

சேலம்: சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணத்திற்கு நீதி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்புக்கு நீதி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 26, 2020, 4:47 PM IST

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதில் அவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் இறந்தவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது காவல் துறையை கண்டித்தும், காவல்நிலைய மரணங்கள் நடக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், மரணத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது தொடர்பாக பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில்," காவல் நிலைய மரணங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்று காவல் துறையினர் அராஜகப் போக்கில் நடந்துகொள்வதால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

இரண்டு ஆய்வாளர்களும் தந்தையையும், மகனையும் அடித்து உதைத்தபோது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 9 காவல் துறை அலுவலர்களும் அமைதியாக இருந்துள்ளனர். இவ்வாறு தந்தையும் மகனும் காவலர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இது போன்று இனி நடைபெறாத வண்ணம் தமிழ்நாடு அரசு அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும். எந்த ஒரு மனிதரும் இதுபோன்ற காவல் துறையின் அடக்குமுறைக்கு ஆளாகிடக்கூடாது என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.