ETV Bharat / briefs

ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு! - Railway Crossing

திண்டுக்கல்: செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Colleage Student Died Rail Crash In Dindigul

author img

By

Published : Jun 19, 2020, 3:18 AM IST

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா-ஈஸ்வரி தம்பதியின் மகன் லோகநாதன்(20). லோகநாதன் திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு பயின்றுவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க லோகநாதன் முயன்றுள்ளார்.

அப்போது, நாகர்கோவிலிலிருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற ரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் லோகநாதன் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் ரயில் முன் குதித்து காதலர்கள் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.