ETV Bharat / briefs

அமராவதி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை!

author img

By

Published : Aug 6, 2020, 3:27 PM IST

கரூர்: அமராவதி அணையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 6) தண்ணீர் திறக்க உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என‌ ஆட்சியர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Karur Collector Anbalazhan
Karur Collector Anbalazhan

கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அமராவதி அணையிலிருந்து, குடிநீர் மற்றும் பாசனப் பகுதிக்கு தண்ணீர் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அமராவதி அணையிலிருந்து ஆற்று மதகு வழியாக கரூர் நகர குடிநீர் தேவை, 18 பழைய வாய்க்கால்கள் உட்பட்ட ஆயக்கட்டு பகுதிகளில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு 06.08.2020 முதல் 16.08.2020 வரை 11 நாள்களுக்கு 1210 மி.க.அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதேபோல், அமராவதி பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பகுதிகளில் குடிநீர் மற்றும் பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு , 06.08.2020 முதல் 20.08.2020 வரை 15 நாள்களுக்கு, 570 மி.க.அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

எனவே, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், இதனை சம்மந்தப்பட்ட பகுதிகளின் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.