தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் தருமபுரி மாவட்டத்தில் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதிற்கு 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம் மற்றும் தலா ரூபாய் 10 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அப்போது மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறியாதாவது, நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகளையும், விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.