வேலூர் மாவட்டம், காட்பாடி, விரிஞ்சிபுரம், பிரம்மபுரம், கண்டிப்பேடு, லத்தேரி, கஞ்சலூர், வண்டறந்தாங்கல் ஆகியப் பகுதிகளில் வேளாண்மைதுறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்னை குட்டை, ஏரி சீரமைப்பு, நவதானிய பயிர்கள் பயிரிடுதல், தோட்டக்கலை, மலைபயிர்கள், மாங்கன்றுகள் பயிரிடுதல், பசுமை தோட்டங்கள், சூரிய ஒளி மின் ஆற்றல் பம்பு செட்டுகளின் செயல்பாடுகள் மற்றும் பப்பாளி தோட்டம் உள்ளிட்டவற்றை சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, விவசாயிகள் இதன் மூலம் பயன்பெற்றனரா? திட்டத்தில் உள்ளம் குறைபாடுகள் என்னென்ன? அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார். விவசாயிகள் இதில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த ஆய்வில் வேளாண்மை அலுவலர்களும், அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: காதலில்லாமல் வாழ்வது வாழ்வா? - கோயில் காளையும் டீ கடைக்காரர் பசுவும் காதலர்களான கதை!