ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஜப்ராபாத் பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், வீடுகளில் நடத்தப்படும் கடைகளை அடைக்கக் கோரி உத்தரவிட்டார். இதனை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரக்கூடிய குடும்பத்தினரை தனிமைப்படுத்தி வைக்கப்பட அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.