முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், "கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி, கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே. அர்ச்சுனன் ஆகிய இருவரும் விரைவில் பூரண நலம்பெற்று இயல்புநிலை இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன்னர்மன்னன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்