கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் செயல்பட்டு வந்த மூன்று அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இதுபோல் தொற்று அதிகமாக பரவி உள்ள பகுதிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் இருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் வர முடியாத அளவுக்கு அடைத்து, கிருமி நாசினி தெளித்தனர்.
மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தினமும் வீடு வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் நோய்த்தொற்று உறுதி செய்து சிகிச்சையில் இருந்த 18 பேர் உயிரிழந்த நிலையில் 815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1259 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: 20 அடி கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை