ETV Bharat / briefs

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா - எச்சரிக்கும் சீனா - சீன ஒப்பந்தம்

பெய்ஜிங்: அமெரிக்க நிறுவனம் தயாரித்த பிஏசி-3 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை மறுசீரமைக்க தைவான் அரசு கோரியதற்கு, அமெரிக்கா வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, லாக்ஹீட் மார்ட்டின் எனும் அந்நிறுவனம் மீது சீன பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தவிட்டுள்ளது.

taiwan missile deal
taiwan missile deal
author img

By

Published : Jul 15, 2020, 3:29 AM IST

தைவான் நாட்டை ஒருங்கிணைப்போம் என சீனா கூறி வரும் சமயத்தில் தைவான் அரசு ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்ட கடலோர பாதுகாப்பு அமைப்பை வாங்க அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த அமைப்பு தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் இருக்கும் கடல் போக்குவரத்தை கண்காணிக்கவும், எதிரி இலக்குகளை அடையாளம் காணவும் தாக்கவும் உதவும். இது தைவானின் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரிக்க உதவும்.

70 வருடங்களாக தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2008ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை அமெரிக்க அரசு தைவானுக்கு போர் விமானங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் என சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு செக் வைக்கும் விதமாக தைவானுக்கான ஆதரவை அவர் பன்மடங்கு அதிகரித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் கடந்த வருடம் மட்டுமே தைவானுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை விற்க அனுமதி அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவிடமிருந்து தைவான் அதிக ஆயுதங்களை வாங்க ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. புதிய தைவான் அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது எனவும் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.