தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 26ஆம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார். அவர் இங்கிருந்து டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்.
அதோடு, அவர் அரசு அலுவலர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளார். பின்னர் முக்கொம்பு மேலணை, கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையை பார்வையிடுகிறார்.
இதனால், திருச்சி மாவட்டத்தில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ப்பட்டு வருகிறது.
இந்த கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில்தான் அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.
இது இக்கட்டான சூழ்நிலையை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து திருச்சி வருகை தருவதால், அவருடன் உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பாதுகாவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சிக்கு வருகை தரவுள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து திடீரென இவர்கள் வருகை தருவதால் திருச்சிக்கு கரோனா அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சில நாள்களில் கோவிட்-19 பாதிப்பு குறைந்துவிடும் ! - அதே டயலாக்கை சொல்லும் அமைச்சர்