ETV Bharat / briefs

உயர் நீதிமன்ற கூடுதல் கட்டடம் - தலைமை நீதிபதி ஆய்வு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட பிராட்வே பேருந்து நிலையம் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று(ஏப்.22) ஆய்வு செய்தார்.

high court
உயர் நீதிமன்றம் கூடுதல் கட்டடம் கட்டும் இட
author img

By

Published : Apr 22, 2021, 10:22 PM IST

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகேவுள்ள 3.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை ஒப்பந்ததிற்கு எடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இந்த நிலத்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வழங்கி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்ட இடத்தை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம் சுந்தரேஷ், சுப்பையா, பாரதிதாசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் இந்துமதி செய்தியாளர்களிடம் கூறுகையில், `சென்னை உயர் நீதிமன்றத்தில் போதிய இட வசதி இல்லாததால், உயர் நீதிமன்றம் அருகே இடம் ஒதுக்க அரசிடம் கேட்டிருந்தோம்.

தற்போது பிராட்வே பேருந்து நிலையம் அருகேவுள்ள 3.34 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து மற்ற நீதிபதிகளிடம் ஆலோசித்த பின்னர் தலைமை நீதிபதி அறிவிப்பார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.