சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற இடங்களில் கரோனா தீநுண்மி அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதிகரிக்கும் மண்டலங்களில் மாநகராட்சி சார்பாக மருத்துவ முகாம் மூலம் அதிக பரிசோதனைகளை செய்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். தினமும் கிட்டத்தட்ட ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டாலும் குணமடைத்தவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மொத்தம் 1,54,624 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 1,41,612 நபர்கள் குணமடைந்துள்ளனர் அதாவது பாதிக்கப்பட்டவர்களின் 93 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மணலியில் 94 சதவீதம் நபர்கள் குணமாகி இருக்கின்றனர்.
ஆலந்தூர், பெருங்குடி இரண்டு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் குணமடைந்தவரின் விழுக்காடு 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. குணமடைந்தவரின் விழுக்காடு அதிகரிப்பதால் சிகிச்சை பெற்று வருபவர்களில் குறைந்து வருகிறது மொத்தம் 9,966 நபர்கள் (6 சதவீதம்) சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,046 (1.97 சதவீதம் ) நபர்கள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் குணமடைத்தவரின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது அதன்படி,
கோடம்பாக்கம் - 15,884 பேர்
அண்ணா நகர் - 15,919 பேர்
ராயபுரம் - 13,772 பேர்
தேனாம்பேட்டை - 13,488 பேர்
தண்டையார்பேட்டை - 11,822 பேர்
திரு.வி.க. நகர் - 10, 655 பேர்
அடையாறு - 10,877 பேர்
வளசரவாக்கம் - 9,088 பேர்
அம்பத்தூர் - 9,912 பேர்
திருவொற்றியூர் - 4,434 பேர்
மாதவரம் - 5,052 பேர்
ஆலந்தூர் - 5,361 பேர்
சோழிங்கநல்லூர் - 4,012 பேர்
பெருங்குடி - 4,725 பேர்
மணலி - 2,240 பேர்