சென்னையில் கடந்த நான்கு நாள்களில் மட்டும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக கூறி 17ஆயிரத்து 865 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "கடந்த நான்கு நாள்களில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியதாக 16 ஆயிரத்து 43 வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல், முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியே சுற்றியதாக நான்கு நாள்களில் ஏழு ஆயிரத்து 524 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், குறிப்பாக இன்று மட்டும் ஊரடங்கை மீறியதாக ஏழு ஆயிரத்து 261 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஐந்து ஆயிரத்து 378 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முககவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியே சுற்றியதாக நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜிவ் படுகொலை குற்றவாளி முருகன் சிறையில் 17ஆவது நாளாக உண்ணாவிரதம்