காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து கடந்த மே 18ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 65.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது. இந்த நீரின் அளவு 50 நாள்கள்வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானதாகும். எனவே டெல்டா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும் விவசாயப் பெருமக்களின் கோரிக்கையை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்க இருக்கிறார்.