பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் செயலை கண்டித்தும் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துதல் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.