திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஜூன் 17) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பெயரில் மப்பேடு, கீழச்சேரி போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூரை அடுத்த வயலூர் பகுதியில் இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரை கண்டதும் தாங்கள் வைத்திருந்த கோணிப்பையுடன் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த கோணிப்பையை சோதனை செய்தபோது அதில் 26 செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் மப்பேடு புதிய காலனியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
மேலும் மப்பேடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் திருடியதை அவர்களே ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,828 பேருக்கு கரோனா