ETV Bharat / briefs

'எந்தப் பாலினமாக இருந்தாலும் பிரச்னை இல்லை' - கேரா டெல்விங்னல்! - சினிமா செய்திகள்

நடிகை கேரா டெல்விங்னல், தான் ஒரு பான்செக்ஸுவல் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Cara
Cara
author img

By

Published : Jun 5, 2020, 1:45 AM IST

சூசைட் ஸ்குவாட் திரைப்படம் மூலம் பிரபலமானவர், நடிகை கேரா டெல்விங்னல். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவரிடம், "நீங்கள் 2015ஆம் ஆண்டு இரு பாலினத்தவர் என்று கூறினீர்கள்" என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, "ஆம்.. அப்போது நான் அதுபற்றி கூற சற்று தயங்கினேன். ஆனால், தற்போது நான் ஒரு, பான்செக்ஸுவல் என்று நான் நினைக்கிறேன். ஆண், பெண் என்று எந்த பாலினராக இருந்தாலும், அவரை எனக்குப் பிடித்திருந்தால் அவர் மீது காதல் வயப்படுகிறேன். இதை சொல்வதற்கு நான் சற்றும் கூச்சப்படவில்லை.

சொல்லப்போனால் இதை நான் வெளியே சொல்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல், இந்த விஷயம் குறித்து நான் யாரிடமும் மறைக்கத் தேவையில்லை. நான் என்னுடைய ரிலேஷன்ஷிப்பை எப்போதும் வெளியே சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது முறிந்து போனால், அந்த நபருடன் என்னால் நட்பைப் பரிமாறி கொள்ள முடியாது. அதனால் தான், நான் மக்களிடம் தெரிவிக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.