புரெவி புயல் காரணமாக, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் காற்றிலிருந்து தென்னை மரங்கள், பயிர்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
செங்கோட்டை குண்டாறு அணை அருகில் உள்ள தனியார் தோட்டத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்ல முத்துராஜா, வருவாய்த் துறையினர், வனத்துறையினர், தீயனைப்பு துறையினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புயல் காற்றிலிருந்து தென்னையைப் பாதுகாப்பது பற்றிய செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.