மதுரை மாவட்டம் உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரை சுமார் 27 கிலோமீட்டருக்கு சுமார் 243 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு சாலை கட்டுப்பாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில், மஸ்தான்பட்டி, சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய இடங்களில் தற்போது சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிந்தாமணி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீரென சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவர்களைச் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.