ETV Bharat / briefs

பிரதமர் நிவாரண நிதி - மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் நிவாரண நிதி குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் நிவாரண நிதி - மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் நிவாரண நிதி - மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 16, 2020, 3:19 AM IST

காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், 'பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டுகால கணக்கை கேட்கிறது. ஆனால், பிரதமரின் நிவாரண நிதி விவரங்கள் குறித்து கேட்கப்படும்போது, ​​பாஜகவினர் மோசமாக உணர்கிறார்கள்.

உண்மையான விஷயம் என்னவென்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பகிர்வதை பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. மேலும் சிஏஜி எனப்படும் தணிக்கை நிதியம் (The Comptroller and Auditor General (CAG)), ரகசியமான செங்கற்களால் கட்டப்படவில்லை' என்று ஷெர்கில் கூறினார்.

'இந்தியா திறந்த நிலையில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பாஜக அரசு கூட பிரதமர் நிவாரண நிதியத்தின் செலவு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.

பி.எம் கேர்ஸ் ('PM CARES') ஸ்டிக்கருடன் வென்டிலேட்டரின் படத்தைப் பகிர்ந்ததற்காக பாஜகவைத் தாக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், 10 ஆயிரம் கோடி நன்கொடையை நியாயப்படுத்துவது ஒரு "வைக்கோலில் ஊசியை" கண்டுபிடிப்பதைப் போன்றது என்று கூறினார்.

அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டரில், ஒரு வென்டிலேட்டரின் காணொலி படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் 'PM CARES' என்று எழுதப்பட்டிருந்தது.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நிறுவப்பட்ட நிதியை தணிக்கை செய்ய காங்கிரஸ் கோரியுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM-CARES Fund), நன்கொடைகள், பெருநிறுவன சமூக பொறுப்புக்கான செலவு ஆகியவை இந்த நிவாரண நிதியிலிருந்து தான் செய்யப்படுகிறது என்று பெருநிறுவன விவகார அமைச்சகம் இறுதியாக அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.