பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீர்வரத்தாக மாயாறும், பவானி ஆறும் உள்ளதால் நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் நீர் மாயாற்று வழியாக அணைக்கு வந்து சேருகிறது.
இதனால் அணைக்கு கடந்த வாரம் 400 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து விநாடிக்கு ஆயிரத்து 639 கன அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 639 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 84.52 அடியாகவும், நீர் இருப்பு 18.2 டிஎம்சி ஆகவும் உள்ளது.
அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் போதிய நீர்வரத்து இருப்பதால் ஆகஸ்ட் 1ஆம் தேதி தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கும், ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் இல்லாமல் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற சயன சேவை