புதுக்கோட்டை மாவட்டம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, அதிக அளவில் கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை புதுக்கோட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே உள்ள கடையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டில் கடன் அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்துவந்த சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கரோனா ஊரடங்கின் காரணமாக வருமானம் இல்லாததால் கடனை அடைக்க முடியாமல் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
“எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.”
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060