மும்பை: தாய்வானின் ஏசஸ் நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட மைக்ரோபோனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொழில்நுட்பமானது, பயனர்களின் தொலைபேசி உரையாடல்களின் போது தேவையற்ற ஒலிகளை உள்வாங்காமல் கடந்துச் செல்லும் திறன் கொண்டது.
இதன் மூலம் தெளிவான உரையாடல்களை நாம் மேற்கொள்ள முடியும். இந்நிறுவனத்தின் உயர்தர ஸ்மார்ட் போன்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலும், காற்று மிகுந்த இடத்திலோ இந்த தொழில்நுட்பம் இருக்கும் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது, எந்த இடையூறும் இருக்காது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சத்தமான இடங்களிலிருந்து ஒருவர் நம்மை அழைத்து தொலைபேசி உரையாடல் மேற்கொள்ளும்போது, இந்த தொழில்நுட்பம் உள்ள தகவல் சாதனத்தை அந்த நபர் பயன்படுத்துவார் என்றால், அவர் பேசுவதை தவிர்த்து சுற்றுப்புறத்தில் இருக்கும் எந்த ஒலியும் நம் உரையாடலுக்கு இடையில் இடையூறு செய்யாது என்பதே இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம்.