ETV Bharat / briefs

"சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஒரு சிலரை தவிர அதிமுகவில் யார் வேண்டுமானாலும் சசிகலா நடராஜனைத் தவிர வந்து சேரலாம் என, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்
"சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Jul 10, 2020, 4:58 PM IST

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் காணொலி மூலம் தேசிய மீன் வளர்ப்போர் தின கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தேசிய மீன் வளர்ப்போர் தினத்தை ஒட்டி மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் பங்கேற்ற அவர்கள் இதற்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.

கடல் பாசி பல்வேறு வகையான மருத்துவக் குணம் கொண்டது, மகளிர் சுய உதவிக்குழு மூலம் அவற்றை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில், மூன்று தவணையில் மீனவர்களுக்கு ரூபாய் 102 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு லட்சத்து 21 ஆயிரம் மீன்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உற்பத்தியை அதிகரிக்க பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சசிகலா சிறையில் இருந்து வெளிவருவது குறித்து கைத்தறித்துறை அமைச்சர் கூறியுள்ளது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம்.

ஆனால், கட்சியின் நிலைப்பாடு என்பது நேற்று, இன்று, நாளை என என்றுமே ஒன்றுதான். அதிமுகவில் ஒரு சிலரை தவிர(சசிகலா) யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம்.

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியில் ஈடுபடுவதால் தமிழ்நாட்டின் அமைச்சர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.

கரோனா உறுதியான உடனேயே அவர்களுக்கும் மற்றவர்களை போல சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதை மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நலமுடன் உள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறித்து கேள்விக் கேட்கப்படுகிறது. நோயாளிகள் சிகிச்சை பெற அரசு, தனியார் என ஆப்ஷன் உள்ளது. எங்கு சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம் அதில் யாரும் தலையிட முடியாது.

தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக பொதுமக்கள் கூட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என் தொகுதியில் உள்ள 52 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக 5 பேருக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு பேசுகிறார்கள். 52 ஆயிரம் பேருக்கு கொடுத்து விட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம் . திமுகவிற்கு விளம்பரம்தான் தேவை அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.