நடிகை அனன்யா பாண்டேவின் தங்கையும் மாடலுமான அல்லானா சமூக வலைதளங்களில் எப்போதும் படு ஆக்டிவாகச் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், ஒருவர் தன்னைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, "நான் ஒரு மாதத்திற்கு முன்பு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவுசெய்தேன். அதைக் கண்ட ஒரு பெண், நான் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய தகுதியானவள் என்று கமெண்ட் செய்திருந்தார். அதுமட்டுமின்றி அந்தப் பதிவில் எனது அம்மா, அப்பாவை டேக் செய்துள்ளார். அதைப் பார்த்தவுடன் அவரை நான் பிளாக் செய்துவிட்டேன்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அவரது கணக்கை நான் பிளாக் செய்தபோதுதான் பார்த்தேன், அவருக்கு என்னைவிட சிறு வயதில் குழந்தை இருக்கிறது என்று. தினமும் காலையில் எழும்போது இதுபோன்ற கருத்துகளைப் பார்க்கிறேன். இது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.