ETV Bharat / briefs

கரோனா: டெல்லியில் தினந்தோறும் 18ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ள முடிவு - உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: டெல்லியில் கரோனா வைரஸ் நெருக்கடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து கட்சிக் கூட்டம்
அனைத்து கட்சிக் கூட்டம்
author img

By

Published : Jun 16, 2020, 2:11 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லியில் இந்த தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 18ஆம் தேதிக்குள் டெல்லி அரசு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தொடங்கும் என்று கூறினார். டெல்லியில் வசிப்பவர்களை திறம்பட சோதனை செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் , அதன் உறுப்பினர்களும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, "தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் சரி செய்யப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, டெல்லியில் உள்ள கரோனா சோதனைக் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்" என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குமார் குப்தா தெரிவித்தார்.

டெல்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ .450 மட்டுமே நிர்ணயக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் கூறினார். மேலும் இந்த சோதனையின் முடிவு 15 நிமிடங்களில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு சார்பில் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.