ETV Bharat / briefs

’அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி’

author img

By

Published : Jun 23, 2020, 7:29 PM IST

சேலம் மாவட்டத்தில் நாளை (24.06.2020) முதல் நாள்தோறும் மாலை 4.00 மணி வரை மட்டும் அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அனைத்து கடைகளும்    மாலை 4 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ”சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து உரிய அனுமதியின்றி சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தகவல் தெரிவிக்காமலும், எவ்வித பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் இருந்ததனால் அவர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 35 என்று இருந்த கரோனா வைரஸ் தொற்றானது தற்பொழுது 185ஆக அதிகரித்துள்ளது. மேலும், வெளி மாநில பயணிகள் 150 பேருக்கு, வெளி மாவட்ட பயணிகள் 181 பேருக்கு என மொத்தம் 516 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு உரிய அனுமதியின்றி வருகை தரும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகின்றது. இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடுவதை தடுத்திட சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கம் தாமாக முன்வந்து நாள்தோறும் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் எனவும் மாலை 4 மணிக்கு பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்கள் சங்கங்களும் தாமாக முன்வந்து சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்திட மக்கள் அதிகம் கூடுவதை தடுத்திடும் விதமாக இந்நேர குறைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்கள் நாளை (24.06.2020) முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும். மொத்த வியாபார கடைகள் உள்ள செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட், லீபஜார் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இதில் அடங்கும்.

இவற்றில் மருந்துக் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங்கும். மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கும், இந்நேர கட்டுப்பாடுகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.