தற்போது கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி பலமுறை பவுண்டரிகள், சிக்சர்களை விளாசி இமாயலய ஸ்கோர்களை குவிப்பதும், அதற்கு எதிர்மறையாக குறைந்த ரன்களை பதிவு செய்தும் வழக்கமாக ஒன்றுதான். தற்போது கேரளாவில் மிகவும் வேடிக்கையும் சுவாரஸ்யமும் கலந்த நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கேரளாவில் 19 வயது உட்பட்டோருக்கான மாவட்ட அளவிளான 30 ஓவர்கள் கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், காசர்கோடு - வயநாடு அணிகளுக்கு இடையிலான போட்டி மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த காசர்கோடு அணி வீராங்கனைகள், சொல்லி வைத்ததுபோல அனைவரும் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆகி, வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதில், அனைத்து வீராங்கனைகளும் போல்ட் முறையில் டக் அவுட் ஆனதுதான் சுவாரஸ்யம் கலந்த வேடிக்கை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, காசர்கோடு அணிக்கு அதிர்ஷ்டவசமாக, வயநாடு அணியினர் நான்கு ரன்களை உதிரிகளாக வழங்கினர். இதையடுத்து, 5 ரன்கள் என்ற இமாலாய(?) வெற்றி இலக்கை, வயநாடு அணி முதல் ஓவரிலேயே எட்டி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
கிரிக்கெட்டில் ஒரு அணி ரன் ஏதும் அடிக்காமல் அனைவரும் கட்அவட் ஆகி வெளியேறிய ஆட்டம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.