கரோனா தொடர்பான நெருக்கடிகளை சமாளிக்க அவசரகால உதவி மையத்தை ஏர் இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது. ஏர் இந்தியா தலைவர் ராஜீவ் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ஊழியர்களும் இக்காலகட்டத்தில் தன்னலம் பாராமல் உழைத்து வருகிறீர்கள். உங்களின் இந்த தன்னலமற்ற சேவையால் ஏர் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில நேரங்களில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ள அவசரசேவை மையம் நிறுவப்பட்டுள்ளது எனறு குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியா நிர்வாகத்தின் தகவலின்படி, இதுவரை அங்கு 40 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.