ETV Bharat / briefs

இங்கிலாந்தில் கரோனாவால் அதிக மக்கள் உயிரிழக்கக் காரணம் என்ன? - இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்

லண்டன் : வயது, பாலினம், உடல் பருமன், நோய் பாதிப்பு ஆகியவையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு காரணிகளாக அமைந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கரோனாவால் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்ன?இங்கிலாந்தில் கரோனாவால் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்ன?
இங்கிலாந்தில் கரோனாவால் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்ன?
author img

By

Published : Jun 19, 2020, 8:08 PM IST

இது தொடர்பாக பி.எம்.ஜே என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நோயாளிகளின் இறப்பிற்கு, பாலினம், உடல் பருமன், இதய, நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் உள்ளிட்டவைகளும் காரணிகளாக இருந்திருப்பது தெரிய வந்ததுள்ளது.

சீனாவைக் காட்டிலும் இங்கிலாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால், வேல்ஸ், ஸ்காட்லாந்து பகுதிகளில் உள்ள 208 மருத்துவமனைகளில் பிப்ரவரி ஆறாம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதிவரை அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 133 நோயாளிகளின் தரவுகளை இங்கிலாந்து ஆய்வாளர்கள் குழு ஒன்று ஆய்வு செய்தது.

இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளில், மூன்றில் ஒரு பகுதி நோயாளிகளின் சராசரி வயது 73 என்பது தெரியவந்தது. மேலும் பெண்களை விட (8,065 பேர்) அதிகமான ஆண்கள் (12,068 பேர்) மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயது காரணியைத் தவிர இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்க்கு அதிகமானோர் உள்ளாகியிருந்ததே இறப்புக்கான முக்கியக் காரணிகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், உடல் பருமன் என்பது சீனாவிலிருந்து வெளியிடப்பட்ட நோய்கள் குறித்த தரவில் முன்னிலைப்படுத்தப்படாத ஒரு முக்கிய, கூடுதல் ஆபத்துக் காரணயாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவுகள் ஏற்கனவே இங்கிலாந்து அரசு, உலக சுகாதார அமைப்பு, உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவது பல ஆய்வுகள் மூலமும் நிரூபணம் ஆகியுள்ளது.

அண்மையில், ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், பெண்களை விட ஆண்களின் இரத்தத்தில் அதிக அளவு உள்ள ஆஞ்சியோடென்சின், ஏ.சி.இ 2 என்சைம்கள் காரணமாக ஆண்களின் ஆரோக்கியமான செல்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பட்டப்படிப்பை நிறைவு செய்த மலாலா; நெட்ஃபிளிக்ஸில் நேரத்தை செலவிடுகிறாராம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.