கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வீரப்பெருமாநல்லுர் கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார் என்பவருக்கும் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் பண்ருட்டி எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் புதுச்சேரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரியவரவில்லை.