ETV Bharat / briefs

திருமணத்திற்குத் தயாரான வனிதா விஜயகுமார் - கோலிவுட் செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
author img

By

Published : Jun 18, 2020, 2:22 PM IST

Updated : Jun 21, 2020, 9:00 AM IST

நடிகர் விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். விஜயகுமாரின் மகளான இவர் 19 வயதில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. ஆனால் அந்தத் திருமணமும் 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளப்போவதாக நேற்று சமூக வலைதளங்களில் பத்திரிகை ஒன்று வெளியானது. அதில் மணமகனின் பெயர் பீட்டர் பால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நெட்டிசன்கள், அது உண்மை தானா என்று தெரியாமல் குழம்பினர்.

இந்நிலையில் இது குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, எனக்கு திருமணம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் தற்போது 40 வயதை நெருங்குகிறேன். இந்த நான்கு மாத லாக்டவுனில் என் வாழ்க்கை குறித்து நிறைய தெளிவு கிடைத்துள்ளது. என் மனதிற்கு பிடித்த ஒருவர் கிடைத்துள்ளார்.

என் வாழ்க்கையில் பீட்டர் பால் வந்துள்ளார். அவரால் நான் தற்போது பாதுகாப்பாக உணர்கிறேன். என்னுடைய யூடியூப் சேனலுக்கு டெக்னிக்கல் உதவி இல்லாமல், தவித்தபோது ஒரு நண்பராக அறிமுகமாகி உதவி செய்தார்.

என் வாழ்க்கையில், எனது குழந்தைகள் தான் எனக்கு முக்கியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது சொல்ல வார்த்தை இல்லாமல் நின்றேன்.

பிறகு அவர் என் குழந்தைகளிடம் கேட்டபோது அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அதுமட்டுமின்றி எங்கள் வாழ்வில் நடந்த சிறந்த விஷயம் இதுதான் என்று கூறியபோது, எனக்கு கண்ணீர் வந்தது. என் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல், இரண்டு மகள்களைப் பார்த்துக் கொள்வது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை.

பீட்டர் பால் ஒரு இயக்குநர். அவர் படத்தை விரைவில் திரையில் பார்த்து தெரிந்து கொள்வீர்கள். எங்களது திருமணம் வரும் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு எங்களது வீட்டில் நடைபெறவுள்ளது.

கோவிட்-19 காரணமாக, குறைந்த நபர்களுடன் வீட்டில் நடத்த முடிவு செய்துள்ளோம். உங்களின் ஆசிகள் எங்களுக்கு தேவை" என்று கூறியுள்ளார்.

Last Updated : Jun 21, 2020, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.