'சார்லி சாப்ளின்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நடன இயக்குநாரகாவும் பணியாற்றுகிறார்.
இதற்கிடையில் இவர் தற்போது ஒரு படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். 'யாதுமாகி நின்றாய்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு புறப்பட்டுவரும் ஒரு பெண், என்னென்ன சிரமத்தை சந்திக்கிறாள். அதிலிருந்து எப்படி தன்னை தற்காத்துக் கொள்கிறார் என்பதே இப்படத்தின் கதை ஆகும்.
மேலும் இது நேரடியாக ஜி நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பெண்குயின்' திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.